Home கலை உலகம் நடிகை அசின் வீட்டைக் கைப்பற்ற எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவு!

நடிகை அசின் வீட்டைக் கைப்பற்ற எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவு!

1435
0
SHARE
Ad

ASIN 4திருவனந்தபுரம், ஜனவரி 2 – கொச்சி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நடிகை அசினின் வீட்டை கைப்பற்ற எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல நடிகை அசினுக்கு கொச்சி ரவிபுரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு உள்ளது.

இந்த வீட்டிற்கான உள் அலங்கார பணிகளை கொச்சியை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் செய்தது. ஆனால் இதற்கான பணம் ரூ.10 லட்சத்தை அந்த நிறுவனத்திற்கு அசின் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து நிறுவனத்தின் உரிமையாளர் ஜெயலட்சுமி, எர்ணாகுளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அசினுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை கைப்பற்ற உத்தரவிட்டது.

#TamilSchoolmychoice

மேலும் வரும் 14-ஆம் தேதிக்குள் அசின் ரூ.10 லட்சத்தை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் எனவும், இத்தொகையை செலுத்த தவறினால் வீட்டை அரசாங்கம் முழுமையாக கைப்பற்றும் என்வும் உத்தரவிட்டுள்ளது.