Home கலை உலகம் தீபிகா படுகோனுடன் போட்டி போடும் அசின்!

தீபிகா படுகோனுடன் போட்டி போடும் அசின்!

838
0
SHARE
Ad

deepikaடெல்லி, ஜூலை 4 – இந்தி படங்களில் ஒதுங்கி இருந்த அசின், தற்போது போட்டியில் குதிக்க முடிவு செய்துள்ளார். தமிழ் படங்களுக்கு முழுக்கு போட்டுவிட்டு பாலிவுட் படங்களில் நடிக்க சென்ற அசின், தன்னை தேடி வந்த படங்களில் மட்டும் நடித்து வந்தார்.

அசினுக்கு பாலிவுட் கதாநாயகிகள் யாரும் பச்சை கொடி காட்டவில்லை. அவரை ஓரம் கட்டுவதிலேயே குறியாக இருந்தனர். இதற்கு அசினும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் ஒதுங்கி இருந்தார்.

இதனால் அசின் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. தற்போது அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு சக கதாநாயகிகளுடன் போட்டியில் குதிக்க முடிவு செய்துள்ளார்.

#TamilSchoolmychoice

அக்ஷய்குமார் நடித்த “ஹவுஸ்புல்” படத்தின் இரண்டு பாகம் ஏற்கனவே வெளியானது. முதல்பாகத்தில் தீபிகா படுகோன் நடித்தார். 2-ஆம் பாகத்தில் அசின் நடித்தார். தற்போது இப்படத்தின் 3-ஆம் பாகம் உருவாகிறது.

இப்படத்தில் இரண்டு கதாநாயகர்கள் நடிக்க உள்ளனர். 3-ஆம் பாகத்தில் இடம்பிடிக்க தீபிகாவும், அசினும் கடும்போட்டியில் ஈடுபட்டுள்ளார்களாம்.