Home கலை உலகம் தீபிகா – ரன்வீர் இணை திருமணத்திற்காக இத்தாலி சென்றனர்

தீபிகா – ரன்வீர் இணை திருமணத்திற்காக இத்தாலி சென்றனர்

1246
0
SHARE
Ad

ரோம் – பாலிவுட் திரையுலகில் கல்யாணத்துக்குத் தயாராகும் அடுத்த இணை ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் இணையாகும். பாலிவுட்டில் பல நடிகர் நடிகையர் காதல் வலையில் சிக்கி – காதலர்களாகச் சுற்றி வந்தாலும், அவர்களில் பலர் கல்யாணம் வரை வருவதில்லை.

பாலிவுட்டின் பல கதாநாயகர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட தீபிகா படுகோன் இறுதியில் ரன்வீர் சிங்கைக் கைப்பிடிக்கப் போவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இவர்களின் திருமணம் எதிர்வரும் நவம்பர் 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் இத்தாலி நாட்டின் வில்லா டெல் பால்பியானெல்லோ (Villa Del Balbianello) என்ற இடத்தில் அழகிய ஏரி ஒன்றின் அருகில் உள்ள தங்கும் விடுதியில் நடைபெறுகிறது.

#TamilSchoolmychoice

இதற்காக, ரன்வீர் குடும்பத்தினரும், தீபிகா குடும்பத்தினரும் இத்தாலி சென்றடைந்துள்ளனர். அவர்கள் இருவருக்கும் மிக நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே அவர்களின் திருமணத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.