Home கலை உலகம் தீபிகா படுகோன் ரன்வீர் சிங்கை மணக்கிறார்

தீபிகா படுகோன் ரன்வீர் சிங்கை மணக்கிறார்

1386
0
SHARE
Ad

மும்பை – இந்தித் திரையுலகில் கால்பதித்து பலரின் கனவுக் கன்னியாகத் திகழ்ந்து ஹாலிவுட் படங்கள் வரை நடித்துப் புகழ் பெற்ற நடிகை தீபிகா படுகோன் மற்றொரு இந்தி நடிகரான ரன்வீர் சிங்கை எதிர்வரும் நவம்பர் 19-ஆம் தேதி திருமணம் செய்கிறார் என இந்திய ஊடகங்கள் ஆரூடம் தெரிவித்துள்ளன. எனினும் தீபிகா – ரன்வீர் தரப்பிலிருந்து இதுவரையில் அதிகாரபூர்வமாக இந்த செய்தி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

‘ஓம் சாந்தி ஓம்’ – என்ற இந்தித் திரைப்படத்தின் மூலம் ஷாருக்கானின் கதாநாயகியாக  அறிமுகமாகி கோடிக்கணக்கான இரசிகர்களின் இதயங்களைக் கொள்ளைக் கொண்ட தீபிகாவின் திரையுலகப் பயணத்தில் பல நடிகர்கள் அவரது காதலர்களாக இருந்துள்ளனர். இறுதியாக ரன்வீர் சிங்குடன் நடித்தபோது ஏற்பட்ட நெருக்கம் அவர்களுக்கிடையில் காதலாக மாறி இப்போது கல்யாணத்தில் முடிந்திருக்கிறது.

ரன்வீர் சிங் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் சிந்தி இனப் பிரிவைச் சேர்ந்தவர். தீபிகா தென்னிந்திய மாநிலமான கர்நாடகப் பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவர்களுக்கிடையிலான திருமணம்தான் தற்போது பாலிவுட்டின் மிகவும் பரபரப்பான சூடான செய்தியாகப் பேசப்படுகிறது.