Home உலகம் பிரேசில் தேர்தல் – புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவாரா?

பிரேசில் தேர்தல் – புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவாரா?

1214
0
SHARE
Ad
ஜேர் போல்சோனாரோ

ரியோ டி ஜெனிரோ – 200 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த கடுமையான பிரச்சாரங்களைத் தொடர்ந்து இன்று அந்நாட்டு மக்கள் வாக்களிக்கச் செல்கின்றனர்.

30 ஆண்டுகளுக்கு முன்னர் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பிய பிரேசில் நாட்டில் இப்போதுதான் அதிபர் தேர்தலால் நாட்டு மக்கள் அரசியல் ரீதியாகப் பிரிந்து நிற்கின்றனர் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

13 வேட்பாளர்கள் அதிபர் தேர்தலுக்குப் போட்டியிடும் நிலையில் பிரச்சாரத்தின்போது கத்தியால் குத்தப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று ஜேர் போல்சோனாரோ வெற்றி பெறுவார் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

போல்சோனாரோ முன்னாள் இராணுவத்தில் கேப்டன் பதவி வகித்த உயர் அதிகாரியுமாவார். இவர் 35 விழுக்காடு வாக்குகளைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

போல்சோனாரோவுக்குக் கடுமையாகப் போட்டியை வழங்குபவர் சாவ் பாலோ நகரின் முன்னாள் மாநகராட்சித் தலைவரான (மேயர்) பெர்னாண்டோ ஹட்டாட் ஆவார். இந்த இருவரில் ஒருவர்தான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என கணிக்கப்படுகிறது.