Home உலகம் முதலாம் உலகப் போரின் நூற்றாண்டு நிறைவு

முதலாம் உலகப் போரின் நூற்றாண்டு நிறைவு

888
0
SHARE
Ad

பாரிஸ் – முதலாம் உலகப் போர் 2014 முதல் 2018 வரை நடைபெற்றதைக் குறிக்கும் நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மரணமடைந்த போர் வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்த பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உலகத் தலைவர்கள் குழுமியுள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் பாரிஸ் சென்றடைந்து அமெரிக்க வீரர்களின் கல்லறை அமைந்திருக்கும் பகுதியில் அவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினார்.

இலண்டன் பகுதியிலும் முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் மரணமடைந்த போர்வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

#TamilSchoolmychoice

1918-ஆம் ஆண்டில் நவம்பர் 11-ஆம் தேதிதான் முதலாம் உலகப் போர் ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அந்த நினைவைக் கொண்டாடும் வகையில் பாரிஸ் நகரில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அமெரிக்க அதிபர் டிரம்ப், பாரிஸ் அதிபர் மேக்ரோன், பிரிட்டன் பிரதமர் தெரசா மே, இரஷிய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோரும் பாரிசின் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.