Home உலகம் கடல் மேற்பரப்பில் பெருகி வரும் பிளாஸ்டிக் கழிவுகள் – அமெரிக்கா ஆய்வு!

கடல் மேற்பரப்பில் பெருகி வரும் பிளாஸ்டிக் கழிவுகள் – அமெரிக்கா ஆய்வு!

534
0
SHARE
Ad

seaவாஷிங்டன், ஜூலை 4 – கடல் மேற்பரப்பின் 88 சதவீதம் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் காணப்படுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

ஸ்பெயினில் உள்ள கேடிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானி ஆன்டிரிஸ் கோஸார் என்பவர் தலைமையிலான குழு கடல் பரப்பில் பெருகி வரும் பிளாஸ்டிக் கழிவுகள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டது. அந்த ஆராய்ச்சியின் முடிவில் தான் மேற்கூறிய தகவலை அந்த குழு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் ஆன்டிரிஸ் கோஸார் கூறியதாவது:-

#TamilSchoolmychoice

“அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய அறிவியல் அமைப்பு சார்பில், கடந்த 2010-ம் ஆண்டு இந்த ஆய்வு தொடங்கப்பட்டது. கடல் வழியாக பயணம் செய்து, 3,000 இடங்களில் இருந்து கடல் நீர் மாதிரிகளை சேகரித்தோம். இந்த மாதிரிகளில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக 88 சதவீதம் பிளாஸ்டிக் மாசு இருப்பது கண்டறியப்பட்டது.”

“கடலின் மேற்பரப்பில் காணப்படும் பிளாஸ்டிக் பொருள்கள், சூரியனின் கதிர் வீச்சால் சிறு, சிறு துண்டுகளாக உடைந்து மிதக்கின்றன. அவ்வாறு சிதைவுறும் பிளாஸ்டிக் துண்டுகள், மைக்ரான்கள் அளவில் இருந்து மில்லி மீட்டர் அளவுக்கு காணப்படுகின்றன.”

“எளிதில் மக்கிப் போகாத இந்த பிளாஸ்டிக்குகள் பல நூறு ஆண்டுகள் கடந்தாலும் அழியாமல் அப்படியே இருக்கும்.”

“இதன் காரணமாக கடல்வாழ் உயிரினங்கள் அழிய நேரிடும். அது மனித உணவுத் தேவைக்குத் தட்டுப்பாடு ஏற்படுத்தும் அபாயத்திற்கு வழிவகை செய்யும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் கடல் பரப்பில் சுமார் 7000 டன் முதல் 35000 டன் வரை பிளாஸ்டிக் கழிவுகள் மிதப்பதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.