Home உலகம் மோசமான அதிபர் ஒபாமா: கருத்துக் கணிப்பில் தகவல்!

மோசமான அதிபர் ஒபாமா: கருத்துக் கணிப்பில் தகவல்!

453
0
SHARE
Ad

obamaவாஷிங்டன், ஜூலை 4 – இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்க அதிபர்களாக இருந்தவர்களிலேயே ஒபாமாதான் மிக மோசமான அதிபர் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

அமெரிக்காவின் செயல்பாடுகள் குறித்தும் அமெரிக்க அதிபர்களிலேயே மோசமானவர் யார்? என்பது குறித்தும் அமெரிக்கர்களிடையே ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

இதில் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்க அதிபர்களாக இருந்தவர்களிலேயே ஒபாமா தான் மிக மோசமான அதிபர் என்று 33 சதவீதம் பேர் கருத்து கூறியிருந்தனர்.

#TamilSchoolmychoice

அவரைத் தொடர்ந்து மிக மோசமான அதிபர் ஜார்ஜ் புஷ் என்று 28 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருந்தனர். ஒபாமாவுக்கு முன் அவர் அதிபராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

obama,2012-ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மிட்ரோம்னி அதிபராக வெற்றி பெற்றிருந்ததால் நன்றாக இருந்திருக்கும் என்று 45 சதவீதம் பேரும், அப்படி நடநதிருந்தால் நாட்டின் நிலை மேலும் மோசமாகியிருக்கும் என்று 38 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

ஒபாமா அரசு திறம்பட செயல்படவில்லை என்று 54 சதவீதம் பேரும், தனது நிர்வாகத்தின் மீது அவர் போதிய கவனம் செலுத்தவில்லை என்று 48 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சிறந்த அதிபராக இருந்தவர் ரொனால்டு ரீகன்தான் என்று 35 சதவீதம் பேர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அவரைத் தொடர்ந்து சிறந்த அதிபர்களாக பில்கிளிண்டன் 18 சதவீதமும், ஜான் எஃப் கென்னடி 15 சதவீதமும், ஒபாமா 8 சதவீதமாகவும் இருப்பதாக கருத்து கூறப்பட்டுள்ளது.