Home வணிகம்/தொழில் நுட்பம் ஒபாமாவுடன் டோனி பெர்னாண்டஸ் சந்திப்பு

ஒபாமாவுடன் டோனி பெர்னாண்டஸ் சந்திப்பு

1422
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஏர் ஆசியா குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவைச் சந்தித்துள்ளார்.

ஒபாமாவுடன் தனது சந்திப்பு குறித்த புகைப்படத்தைத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பதோடு, அவருடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்ததாகவும் டோனி குறிப்பிட்டிருக்கிறார்.

எனினும் அந்த சந்திப்பு எங்கு நடந்தது – எந்த நோக்கத்திற்காக ஒபாமாவைச் சந்தித்தார் என்பது போன்ற விவரங்களை டோனி இன்னும் வெளியிடவில்லை.

#TamilSchoolmychoice

ஏர் ஆசியா இந்தியா நிறுவனம் சில அனைத்துலக பயணங்களுக்கான அனுமதியைப் பெற்றதில் முறைகேடுகள் நடந்ததாக இந்தியாவின் காவல் துறை டோனி பெர்னாண்டஸ் மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அவர் ஒபாமாவைச் சந்தித்துள்ளார்.