அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளை குறி வைத்து தொடர் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ள அல்கொய்த, பல்வேறு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுடன் சேர்ந்து சர்வதேச விமானங்களை தகர்க்கும் நோக்கத்துடன் பல அதிநவீன வெடிகுண்டுகளை உருவாக்கி வருவதாக அமெரிக்க உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
குறிப்பாக உலகின் 3-வது பரபரப்பான விமான நிலையமான ஹீத்ரு விமான நிலையத்தில் அதிநவீன ஆயுதங்களைக் கொண்ட பாதுகாப்புப் படையினர் கடும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.