Home உலகம் எபோலாவிற்கான தடுப்பு மருந்தினை கண்டு பிடித்துள்ள சீனா!

எபோலாவிற்கான தடுப்பு மருந்தினை கண்டு பிடித்துள்ள சீனா!

499
0
SHARE
Ad

ebaloபெய்ஜிங், ஜனவரி 2 – மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய எபோலா நோய்க்கான தடுப்பு மருந்தினை சீனா கண்டு பிடித்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான லைபிரியா, கினியா, சியாரா லியோன் ஆகியவற்றில் 7000-க்கும் மேற்பட்டோர் பலியாகக் காரணமாக இருந்த எபோலா வைரஸ், உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

இந்நிலையில் எபோலா வைரஸ் பரவுவதை தடுக்க, சீனா  தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இந்த புதிய தடுப்பு மருந்தை இம்மாத இறுதியில் மனிதர்களுக்கு செலுத்த அந்நாட்டின் உயர் மருத்துவக் குழு முடிவு செய்துள்ளது.

#TamilSchoolmychoice

இது குறித்து அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் யாங் யுஜுன் கூறியதாவது:- “சீன இராணுவத்தின் தலைசிறந்த ஆராய்ச்சி அமைப்புகளில், இராணுவ மருத்துவ அறிவியல் குழுவும் ஒன்று. அந்த குழு எபோலாவிற்கான தடுப்பு மருந்தினைக் கண்டு பிடித்துள்ளது”.

“அரசாங்கமும், இராணுவ அதிகாரிகளும் இந்த தடுப்பு மருந்திற்கு அனுமதி அளித்துள்ளனர். இந்த மாதத்தில் இதற்கான மருத்துவ சோதனைகள் தொடங்கும்” என்று அவர் கூறியுள்ளார். எபோலா தடுப்பு மருந்தினை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தும் உலகின் மூன்றாவது நாடு சீனா என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.