Home உலகம் எபோலா பலி எண்ணிக்கை 11,000-ஐ தாண்டியது – உலக சுகாதார நிறுவனம் தகவல்!

எபோலா பலி எண்ணிக்கை 11,000-ஐ தாண்டியது – உலக சுகாதார நிறுவனம் தகவல்!

646
0
SHARE
Ad

3(2623)ஜெனீவா, மே 8 – எபோலா நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சுமார் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளான சியரா, லைபிரியா, கினியா ஆகியவற்றில் எபோலா நோய் கடந்த 2013-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பரவியது. இதற்கென மருந்துகள் கண்டுபிடிக்காத நிலையில், இந்நோய் உலக்குக்கே அச்சுறுத்தலாக இருந்தது.

நோயை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதுவரை எபோலா நோய்க்கு 11,005 பேர் உயிரிழந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

26,593 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகப்பட்சமாக லைபிரியாவில் 4,716 பேர் பலியாகி உள்ளனர். சியராவில் 3,903 பேரும், கினியாவில் 2,386 பேரும் எபோலாவால் உயிரிழந்துள்ளனர்.

082எபோலாவால் அதிகம் பாதிக்கப்பட்ட இந்த மூன்று நாடுகளும் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக நோய் கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த ஒருவாரத்தில் லைபிரியாவில் எபோலா நோய் அறிகுறி இல்லை.

கினியா, சியராவில் தலா 9 பேருக்கு எபோலா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதுவே, கடந்த ஓராண்டில் எபோலாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் மிககுறைந்த அளவு என்பது குறிப்பிடத்தக்கது.