Home நாடு தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் தயக்கம் ஏன்? – போயிங்கிற்கு மகாதீர் கேள்வி!  

தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் தயக்கம் ஏன்? – போயிங்கிற்கு மகாதீர் கேள்வி!  

857
0
SHARE
Ad

TUN DR MAHATHIR MOHAMADகோலாலம்பூர், ஜனவரி 2 – விமானத்திற்கு தேவையான தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் போயிங் நிறுவனம் தொடர்ந்து தயக்கம் காட்டி வருவது ஏன் என முன்னாள் பிரதமர் டாக்டர் துன் மகாதீர் முகமட் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஏர் ஏசியா விமான விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள மகாதீர், போயிங் நிறுவனம் குறித்து தெரிவித்துள்ளதாவது:-

“போயிங் நிறுவனம் தனது விமானங்களில், விமானத் தகவல்களை நிலைப்படுத்தக் கூடிய கருவிகளையும், ஒலிப்பதிவு கருவிகளையும் மேம்படுத்துவதில் ஏன் தயக்கம் காட்டுகிறது என்று புரியவில்லை. இதே தொழில்நுட்பங்களை தங்கள் தயாரிப்பில் உள்ள இராணுவ விமானங்களில் மேம்படுத்தும் பொழுது, பயணிகள் விமானங்களில் ஏன் மேம்படுத்தக் கூடாது?”

#TamilSchoolmychoice

“இந்த தொழில் நுட்பங்களை ஏர்பஸ் நிறுவனம் ஏற்கத் தயாராக உள்ளது. விமானத் தகவல்களை நிலைப்படுத்தக் கூடிய அமைப்பில், ‘லொகேடர் பேகன்’ (locator beacon) கருவியும் இணைக்கப்படும். அதன் மூலம், விமானம் எந்த இடத்தில் விபத்திற்குள்ளாகி இருக்கிறது என்பதை எளிதாக கண்டறிய முடியும்.”

“ஒருவேளை, இந்த தொழில்நுட்பங்களை போயிங் தங்கள் விமானங்களில் மேம்படுத்தி இருந்தால், எம்எச் 370-க்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. இதுவரை எம்எச் 370 விமானத்திற்கு என்ன ஆனது என்பது விடை தெரியாத கேள்வியாகவே உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.