Home இந்தியா தமிழக வனத்துறை அமைச்சராக எம்.எஸ்.எம்.ஆனந்தன் நேற்று பதவியேற்பு!

தமிழக வனத்துறை அமைச்சராக எம்.எஸ்.எம்.ஆனந்தன் நேற்று பதவியேற்பு!

682
0
SHARE
Ad

anandhanசென்னை, ஆகஸ்ட் 10- எம்.எஸ்.எம்.ஆனந்தன் நேற்று மீண்டும் வனத்துறை அமைச்சராகப் பதவியேற்றார்.

திருப்பூரைச் சேர்ந்தவர் எம்.எஸ்.எம்.ஆனந்தன். வயது 54. 2011 சட்டசபைத் தேர்தலில், திருப்பூர் வடக்குத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

பின்பு 2013 ஜூன்18ல் வனத்துறை அமைச்சராகத் துறை  மாற்றம் செய்யப்பட்டார்.

#TamilSchoolmychoice

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பதவியிழந்து, பின் அவ்வழக்கிலிருந்து விடுதலையாகி ஜெயலலிதா முதல்வராக மீண்டும் மே23- ஆம் தேதி பதவியேற்ற போது, அமைச்சரவையில் இருந்து கழற்றி விடப்பட்டார். அதுவரை, ஆனந்தன் கவனித்து வந்த வனத்துறை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம், கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது.

சென்ற மாதம் 27-ஆம் தேதி, போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சரவையிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட பின் அவரிடமிருந்த போக்குவரத்துத் துறை, தொழில் துறை அமைச்சர் தங்கமணியிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 6-ஆம் தேதி மீண்டும் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. அப்போது ஆனந்தனை மீண்டும் வனத்துறை அமைச்சராக நியமிக்கும்படி ஆளுநருக்கு முதல்வர் ஜெயலலிதா பரிந்துரை செய்தார்.

அதன்படி, நேற்று மாலை 3:00 மணிக்கு ஆளுநர் மாளிகையில் ஜெயலலிதா முன்னிலையில் ஆளுநர் ரோசய்யா புதிய அமைச்சராக ஆனந்தனுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதன்மூலம் தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.