Home இந்தியா ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல்: பிரவீன் குமார் தகவல்

ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல்: பிரவீன் குமார் தகவல்

556
0
SHARE
Ad

KUMARசென்னை, அக்டோபர் 14 – காலியாக உள்ள ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதிக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை தெரிவித்த அவர், தமிழகத்தில் நாளை வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது என்றார்.

பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தத்திற்கு அக்டோபர் 15ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்த பிரவீன்குமார், www.elections.tn.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம் என்றார்.

#TamilSchoolmychoice

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஜெயலலிதா, சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் தானாகவே சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். இதனால், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில், ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதிக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.