Home வாழ் நலம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் ஜவ்வரிசி!

உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் ஜவ்வரிசி!

1027
0
SHARE
Ad

42அக்டோபர் 14 – ஜவ்வரிசி என்றாலே நாம் சாப்பிடக் கூடிய பாயாசம் நம் மனக் கண்களுக்கு முன் சட்டென்று வந்து போகும். ‘சாகோ பாம்’ என்ற ஒரு வகைப் பனைமரத்தின் தண்டுப் பகுதியிலிருந்து ஜவ்வரிசி தயாரிக்கப்படுகிறது.

கார்போஹைட்ரேட் எனும் சத்து அதிகமுள்ள ஜவ்வரிசி ஒரு ஆரோக்கியமான உணவாகும். பாயாசம் தவிர, கேக், உப்புமா மற்றும் சூப்புகளிலும் ஜவ்வரிசி பயன்படுத்தப்படுகிறது.

நீங்கள் தயாரிக்கும் உணவுகள் கொஞ்சம் கெட்டியாக இருப்பதற்காக ஜவ்வரிசி சேர்க்கப்பட்டாலும், செரிமானத்திற்கு ஏற்றதாகவும் இது விளங்குகிறது.

#TamilSchoolmychoice

sabu6நம் உடலுக்கு ஜவ்வரிசி எவ்வளவு ஆரோக்கியமானது என்பது குறித்த மேலும் சில விவரங்கள் இதோ…

செரிமானத்திற்கு:

சில உணவுகள் நம் குழந்தைகளுக்குச் செரிக்காமல் எரிச்சலையும் கொடுத்துவிடும். அப்போது, ஜவ்வரிசியை பால் அல்லது நீரில் சேர்த்து கொதிக்க வைத்து, அதில் சர்க்கரை அல்லது உங்களுக்குப் பிடித்த மசாலாக்களை சேர்த்து, அதைக் குழந்தைக்குக் கொடுத்தால் செரிமானப் பிரச்சனைகள் நீங்கும்.

100 கிராம் ஜவ்வரிசி, 94 கிராம் கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதம் உள்பட 355 கலோரிகள் வரை கொடுக்கிறது. அரிசியுடன் ஜவ்வரிசியும் சேர்த்துச் சாப்பிட்டால், அது சூடான உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும். மேலும் அதில் உள்ள கார்போஹைட்ரேட்டும் உடலுக்கு அதிக சத்தைக் கொடுக்கிறது.

sago,இந்திய பாரம்பரியமிக்க உணவாகக் கருதப்படும் ஜவ்வரிசி, சில மூலிகை மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஜவ்வரிசி கொண்டு பல வகையான உணவுகளை நாம் தயாரிக்க முடியும்.

இதில் புரதம், வைட்டமிகள் குறைவாக இருப்பதால், எந்த வகையான உணவுடனும் அதைச் சேர்த்து சத்தான உணவாக மாற்றலாம். சிலர் இதைக் கிச்சடியாகவும் செய்து சாப்பிடுவார்கள்.

ஜவ்வரிசியில் செய்யப்பட்ட உணவைக் காலையில் எடுத்துக் கொண்டால், அன்று முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாமாம். மேலும் நோய் வாய்ப்பட்டவர்களுக்கு ஒரு சரியான மாற்று உணவாக ஜவ்வரிசியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.