Home நாடு ரபிசி இரண்டு பதவிகள் வகிப்பதில் தவறில்லை – அன்வார் கருத்து

ரபிசி இரண்டு பதவிகள் வகிப்பதில் தவறில்லை – அன்வார் கருத்து

559
0
SHARE
Ad

ANWAR IBRAHIMகோலாலம்பூர், அக்டோபர் 14 – பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் ரபிசி ரம்லி கட்சியின் பொதுச்செயலாளராகவும் இரண்டு பொறுப்புகளை வகிப்பது கட்சியின் கொள்கைகளுக்கு முரணானது கிடையாது என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

காரணம் கட்சியின் அரசியலமைப்பு ஒரு உறுப்பினர் இரண்டு பொறுப்புகள் வகிப்பதை அனுமதிக்கின்றது என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

டத்தோ சைஃபுடின் நாசுசன் இஸ்மாயிலுக்குப் பதிலாக பிகேஆர் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக அக்கட்சியின் உதவித்தலைவர் ரபிசி ரம்லி நேற்று முன்தினம் கட்சியின் தலைமைத்துவத்தால் நியமனம் செய்யப்பட்டார்.

#TamilSchoolmychoice

சைஃபுடின் மற்றும் பிகேஆர் உதவித்தலைவர் நூருல் இசா ஆகிய இருவரும் கட்சியின் தேர்தல் பிரிவு இணை இயக்குநர்களாக நியமிக்கப்பட்டனர்.

அதே வேளையில், ரபிசி ரம்லிக்கு பதிலாக பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சிம் டிஸ் டிசின் வியூக இயக்குநர் பதவியில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.