Home நாடு மஇகா தேர்தல் முறைகேடுகள்: அக்டோபர் 16இல் பிரதமரிடம் ஆட்சேப மனு!

மஇகா தேர்தல் முறைகேடுகள்: அக்டோபர் 16இல் பிரதமரிடம் ஆட்சேப மனு!

730
0
SHARE
Ad

t-mohanகோலாலம்பூர், அக்டோபர் 14 – மஇகா தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்களுக்கு சங்கங்களின் பதிவிலாகா (ஆர்ஓஎஸ்) எந்தவித முடிவுகளை இதுவரை அறிவிக்காததால், வரும் அக்டோபர் 16-ம் தேதி இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நஜிப் துன் ரசாக்கிடம் ஆட்பேனை மனு வழங்கப்படவுள்ளது.

தேர்தலில் போட்டியிட்டு ஏமாற்றம் அடைந்தவர்களும், கட்சி தலைமையகத்தின் மீது அதிருப்தி கொண்டவர்களும் இந்த ஆட்சேபனை மனு வழங்கும் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அண்மையில் நடந்த இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் மஇகா இளைஞர் பிரிவு தேசியத் தலைவர் டத்தோ டி.மோகன் (படம்), தாங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆர்ஓஎஸ் எந்த முடிவையும் இதுவரை அறிவிக்கவில்லை என்றும், இந்த விவகாரம் குறித்து தாங்கள் பலமுறை ஆர்ஓஎஸ் அதிகாரிகளை சந்தித்துப் பேசியதாகவும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், மஇகா தேர்தல் குளறுபடிகள் தொடர்பான புகார்கள் அனைத்தும் விசாரணை முடிவுற்று அதற்கான ஆய்வறிக்கையும் தயார் செய்யப்பட்டுவிட்டதாக தங்களுக்கு தகவல் கிடைத்தாகவும் மோகன் குறிப்பிட்டார்.

ஆனால், இது குறித்து ஆர்ஓஎஸ் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும், இதன் காரணமாக தான் பிரதமரிடம் ஆட்சேபனை மனு வழங்கப்படவுள்ளது என்றும் மோகன் தெரிவித்தார்.

கட்சித் தேர்தலில் நடைபெற்ற குளறுபடிகளுக்கு உரிய நடவடிக்கை எடுத்து, கட்சித் தலைவர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதே இந்த ஆட்சேபனை மனு தயாரிக்கப்பட்டதன் நோக்கம் என்றும் டி.மோகன் தெரிவித்தார்.