புதுடெல்லி, அக்டோபர் 14 – அடுத்த மாதம் ஆஸ்திரேலியா பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்திய பிரதமர் என்ற கவுரவத்தை அவர் பெறுகிறார். ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க அடுத்த மாதம் ஆஸ்திரேலியா செல்கிறார் மோடி.
அப்போது இரு நாட்டு உறவுகளையும் மேம்படுத்துவது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களின் பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் டேவிட் மேகரூன், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோருக்கு மட்டும் ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதில் இங்கிலாந்து சீன தலைவர்கள் ஏற்கனேவே ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளனர். ஆனால் இந்திய பிரதமர் ஒருவர் உரையாற்றுவது முதல் முறை என்பதால் இது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக அந்நாட்டு அரசால் கருதப்படுகிறது.
கடந்த 1986-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்திக்கு பின்னர் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய பிரதமர் என்ற பெருமையும் மோடி பேர உள்ளது குறிப்பிடத்தக்கது.