Home இந்தியா ஓட்டு எண்ணிக்கை முடிவு வெளியாக தாமதமாகும் – பிரவீன்குமார் பேட்டி

ஓட்டு எண்ணிக்கை முடிவு வெளியாக தாமதமாகும் – பிரவீன்குமார் பேட்டி

690
0
SHARE
Ad

praveeenசென்னை, மே 3 – தமிழகத்தில் ஓட்டு எண்ணிக்கையின் போது புதிய முறை கடைபிடிக்கப்படுவதால், முதல் முடிவு வெளிவர தாமதமாகும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார். சென்னையில் நிருபர்களுக்கு, பிரவீன்குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது,

இந்த முறை ஓட்டு எண்ணிக்கையில் தாமதம் ஏற்படலாம். இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதல் காரணம், முன்பிருந்ததைவிட வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இரண்டாவது காரணம், ஒவ்வொரு ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும், அந்த முடிவுகளை வேட்பாளர்கள் அல்லது ஏஜெண்டுகளிடம் நகலெடுத்து கொடுத்த பிறகே 2-வது ஓட்டு எண்ணிக்கை தொடங்குவோம்.

#TamilSchoolmychoice

ஒவ்வொரு மேஜையில் பெறப்படும் வாக்கு எண்ணிக்கை முடிவையும் அவர்களிடம் நகலாகக் கொடுக்க இருக்கிறோம். இந்த நடைமுறை, தமிழகத்தில் முதன்முறையாக அமல்படுத்தப்படுகிறது.

எதிர்காலத்தில் தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டு கூறுவதை தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்