Home இந்தியா காங்கிரசுக்கு 12 இடங்களை வழங்கினார் லாலு பிரசாத் யாதவ்!

காங்கிரசுக்கு 12 இடங்களை வழங்கினார் லாலு பிரசாத் யாதவ்!

602
0
SHARE
Ad

laluபுதுடில்லி, மார்6 – பீகாரில், காங்கிரஸ் – ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையே, கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு, நேற்று முடிவடைந்துள்ளது. காங்கிரசுக்கு 12 இடங்களை, லாலு பிரசாத் வழங்கியுள்ளார். மொத்தம், 40 நாடாளுமன்றத் தொகுதிகளை கொண்ட பீகாரில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியும், ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜனசக்தி கட்சியும் இணைந்து போட்டியிட்டன.

காங்கிரஸ் கட்சி கேட்ட தொகுதிகளை வழங்க அக்கட்சிகள் மறுத்ததால், அந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்க விரும்பிய காங்கிரஸ், தனித்து போட்டியிட்டது. அந்த தேர்தலில், இந்த மூன்று கட்சிகளும் படுதோல்வி அடைந்தன. லாலு கட்சி  நான்கு இடங்களிலும், காங்கிரஸ்  இரண்டிலும் வெற்றி பெற்றன.  பஸ்வான் கட்சி  ஒரு இடத்தை கூட பிடிக்கவில்லை.

இந்த முறை துவக்கத்திலேயே காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட விரும்பிய லாலு, 11 தொகுதிகளை தர சம்மதித்தார். ஆனால், கூடுதல் தொகுதிகள் வேண்டும். குறிப்பிட்ட சில தொகுதிகள் வேண்டும் என, காங்கிரஸ் நெருக்கடி கொடுத்ததால், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு இழுபறியானது.

#TamilSchoolmychoice

பஸ்வான் கட்சி, லாலு பிரசாத் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்துவிட்டது. இருந்த போதிலும், காங்கிரசுக்கும், லாலு கட்சிக்கும் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்தே வந்தது. இந்நிலையில் நேற்று  இந்த இரு கட்சிகளுக்கும் இடையே  தொகுதி பங்கீடு முடிவடைந்தது. காங்கிரசுக்கு, 12 தொகுதிகளும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு, ஒரு தொகுதியும் வழங்க, லாலு கட்சி முன்வந்தது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும், கூட்டணி முடிவாகாமல் போனால் நன்றாக இருக்காது என கருதிய காங்கிரஸ், லாலு கொடுத்த தொகுதிகளை வாங்கிக் கொண்டது. அதன் படி, பீகாரில், 27 தொகுதிகளில் லாலு கட்சியும், 12 தொகுதிகளில் காங்கிரசும், ஒரு தொகுதியில் தேசியவாத காங்கிரசும் போட்டியிடுவது இறுதியாகியுள்ளது.