கோலாலம்பூர், மார்ச் 17 – கடந்த 2013 ஆம் ஆண்டில், ஹாங்காங் நாட்டின் அந்நிய நேரடி முதலீட்டில்ம, மலேசியா முன்னிலை வகித்துள்ளது.
இது அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் அதிகமாகும். மலேசியா –ஹாங்காங் இடையே கடந்த 2013 ஆம் ஆண்டு செய்யப்பட்ட மொத்த வர்த்தகத்தின் மதிப்பு 1.7 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
இது அமெரிக்க டாலரில் 14.65 பில்லியனுக்கு நிகரானதாகும்.
இது குறித்து அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அந்நாட்டின் வர்த்தக மேம்பாட்டுக் குழுவின் துணை நிர்வாக இயக்குனர் மார்கரெட் ஃபோங் (Margaret Fong), மலேசியாவின் சிறிய மற்றும் நடுத்தர வணிக நிறுவனகங்களை ஹாங்காங்கில் முதலீடு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.
மேலும் மலேசியா மற்றும் ஹாங் காங் இடையேயான அந்நிய நேரடி முதலீட்டின் சுதந்திரமான சிறப்புக் கூறுகளை ஆராய்ந்து, கடந்த 2009 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், இரு நாடுகளுக்கிடையே பொருளாதார த்தைப் பலப்படுத்தல் தொடர்பாக ஒரு கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி இரு நாட்டு வர்த்தக நிறுவனங்களுக்கிடையேயான வர்த்தக விதிகள் மற்றும் வரிகள் தளர்த்தப்பட்டன. மேலும் வர்த்தகம் தொடர்பான பொருளாதாரத்தை பலப்படுத்துதல் தொடர்பாக கூட்டு ஒப்பந்த சட்டங்களும், சேவைகளும் நிபுணத்துவ பரிமாற்றங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல் இரட்டை வரி 10% இருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டது.
ஹாங்காங், நிதி மற்றும் வர்த்தகத்தில் சிறப்பாகக் கோலோச்சி வருவதாகத் தெரிவித்த மார்கரெட், வர்த்தகம் தொடர்பாக அண்டை நாடுகளான சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவை அணுகவிருப்பதாகத் தெரிவித்தார்.