மார்ச் 17 – அமெரிக்காவின் இரட்டை கோபுர 9/11 தாக்குதலைப் போல் இந்தியாவில் எங்காவது நடத்தும் நோக்கத்தோடு, மலேசிய விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்டிரோப் டால்போல் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போன மாஸ் இந்தியப் பெருங்கடல் வழியாக சென்றிருக்கலாம் என்று தேடும் பணி நடைபெற்று வருவதால், MH370 கடத்தப்பட்டு, இந்தியாவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருக்கலாம் என்றும் ஸ்டிரோப் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி, அமெரிக்காவில் பயணிகள் விமானங்கள் நான்கை கடத்திய 19 தீவிரவாதிகள், இரண்டு விமானங்களை ஆயுதமாகப் பயன்படுத்தி இரட்டை கோபுரங்களையும், ஒரு விமானத்தைக் கொண்டு ‘பெண்டகன்’ என்று அழைக்கப்படும் அமெரிக்க பாதுகாப்பு மையம் அமைந்துள்ள வளாகத்தையும் தாக்கினர்.
இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தீவிரவாதிகள் கடத்திய நான்காவது விமானத்தில் இருந்த பயணிகள் அவர்களைத் தடுக்க முயன்றதால் விமானம் வேண்டுமென்றே வெடிக்கச் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதே போல் MH370 விமானத்திற்கு அப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்கலாம் என்று ஸ்டிரோப் தெரிவித்துள்ளார்.