Home அரசியல் சொத்து மதிப்பீட்டு வரி உயர்வை எதிர்த்து 80,000 ஆட்சேபனை கடிதங்கள்!

சொத்து மதிப்பீட்டு வரி உயர்வை எதிர்த்து 80,000 ஆட்சேபனை கடிதங்கள்!

659
0
SHARE
Ad

articlesdbkl_hike_1612_600_399_100

கோலாலம்பூர், டிசம்பர் 17 – சொத்து மதிப்பீட்டு வரி உயர்வை எதிர்த்து மொத்தம் 80,000 ஆட்சேபனை கடிதங்கள் இதுவரை கோலாலம்பூர் மாநகர் மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக  கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் தெரிவித்தார்.

இன்று பண்டார் தாசிக் செலதானில் நடைபெற்ற பார்க் ‘என் ரைடு (Park ‘N Ride) நிகழ்ச்சியின் திறப்பு விழாவில் பேசிய அட்னான், இந்த எண்ணிக்கை நகர்புறத்தில் எதிர்க்கப்பட்ட 500,000 சொத்து மதிப்பீட்டு வரி குறித்த ஆட்சேபனை கடிதங்களை ஒப்பிட்டு பார்க்கையில் கணிசமாக இல்லை என்றும் , இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆட்சேபனை கடிதங்களிலும் ஒரே காரணமும் புகாரையும் தாங்கியுள்ளதாகவும் அவர் அறிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

மேலும், சொத்து உரிமையாளர்கள் அனைவரும் தங்கள் எதிர்ப்பு கடிதங்களை சமர்ப்பிக்க இன்றே  கடைசி நாள் என அவர் மேலும் தமது உரையில் தெரிவித்திருந்தார்.