Home நாடு சொத்து மதிப்பீட்டு வரியில் 2 சதவிகிதம் குறைப்பதாக டிபிகேஎல் அறிவிப்பு!

சொத்து மதிப்பீட்டு வரியில் 2 சதவிகிதம் குறைப்பதாக டிபிகேஎல் அறிவிப்பு!

644
0
SHARE
Ad

datuk_seri_tengku_adnan1-300x212கோலாலம்பூர், டிச 20 – சொத்து மதிப்பீட்டு வரியில் 2 சதவிகிதம் குறைத்துக்கொள்வதாக கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் (டிபிகேஎல்) நேற்று ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் சொத்து உரிமையாளர்கள் சற்று நிம்மதியடைவார்கள் என்று நம்பப்படுகிறது.

அதன் படி, வர்த்தகம் உள்ளிட்ட சொத்துகள் 12 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதமாகவும், குடியிருப்புக்கள் 4 சதவிகிதத்தில் இருந்து 2 சதவிகிதமாகவும் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உதாரணமாக, செராஸ் ல் இருக்கும் ஒரு வீட்டின் மதிப்பு 9,000 ரிங்கிட் என்று வைத்துக்கொண்டால், முன்பு 6 சதவிகிதம் (540 ரிங்கிட்) கட்ட வேண்டிய உரிமையாளர்கள் தற்போது 4 சதவிகிதம்  (360 ரிங்கிட் ) வரி செலுத்தினால் போதும். அவர்களுக்கு 180 ரிங்கிட் குறைக்கப்படுகிறது என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் நேற்று சிட்டி ஹாலில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்த புதிய மதிப்பீட்டு விகிதம் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சொத்து ஆண்டு மதிப்பீடு உயர்த்தப்பட்டதை அடுத்து நகரவாசிகள் கடந்த 1 வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து இந்த புதிய மதிப்பீட்டு விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஓய்வு பெற்ற மற்றும் ஊனமுற்ற சொத்துரிமையாளர்களுக்கு மேலும் சலுகைகள் வழங்கப்படும் என்றும்  அட்னான் அறிவித்தார்.

இந்த புதிய சொத்து மதிப்பீட்டு விகிதம் குறைந்த மற்றும் நடுத்தர விலை சொத்துக்களுக்கு கிடையாது என்றும் அட்னான் குறிப்பிட்டார்.

வரும் 2014 ஆண்டின் இடைப்பட்ட மாதங்களில் தான் இந்த புதிய மதிப்பீடு அமலுக்கு வரும் என்றும், அதுவரை சொத்துரிமையாளர்கள் தற்போதைய சொத்து மதிப்பீட்டையே பின்பற்ற வேண்டும் என்றும் அட்னான் தெரிவித்தார்.

சொத்து மதிப்பீட்டு வரி உயர்வுக்கு எதிராக இதுவரை 153,187 புகார்கள் வந்துள்ளதாகவும், அவை வரும் 2014 ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் மார்ச் 31  வரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அட்னான் கூறினார்.

“சொத்து மதிப்பீட்டு வரி உயர்வு மூலம் அரசாங்கத்திற்கு 400 மில்லியன் நிதி சேரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இந்த புதிய மதிப்பீட்டால் 200 மில்லியன் மட்டுமே சேமிக்க முடியும். இது தான் அரசாங்கம் மக்களின் மீது கொண்டுள்ள அக்கறை. எனவே தயவு செய்து எதிர்கட்சிகளின் பேச்சைக் கேட்காதீர்கள்” என்று அட்னான் கூறினார்.