Home 13வது பொதுத் தேர்தல் பழி போடுவதை நிறுத்துங்கள் – அம்னோவிற்கு மசீச இளைஞர் பிரிவு கண்டனம்

பழி போடுவதை நிறுத்துங்கள் – அம்னோவிற்கு மசீச இளைஞர் பிரிவு கண்டனம்

760
0
SHARE
Ad

Chong Sin Woonகோலாலம்பூர், டிச 20 – 13 வது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி யின் பின்னடைவுக்கு மசீச தான் காரணம் என்று குற்றம் சாட்டுவதையும், பழி வாங்குவதையும் நிறுத்துங்கள் என்று மசீச இளைஞர் பிரிவு அதன் கூட்டணிக் கட்சிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

“மக்களின் உணர்வுகளை புரிந்து பொதுத்தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளுங்கள். தேசிய முன்னணிக்கு வாக்களிக்கவில்லை என்று அவர்களின் மீது பழிசுமத்தாதீர்கள்” என்று நேற்று நடைபெற்ற மசீச 49 வது ஆண்டு கூட்டத்தில் இளைஞர் பிரிவு தெரிவித்துள்ளது.

“சீனர்களளுக்கு எதிராக அவதூறாக பேசும் பொறுப்பற்ற அம்னோ தலைவர்களுக்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கின்றோம்.தேசிய முன்னணி அந்த தலைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகின்றோம்” என்றும் கூறியுள்ளது.

#TamilSchoolmychoice

மேலும்,”கல்வியைப் பொறுத்தவரை 1,295 சீனப் பள்ளிகளுக்கு அரசாங்கம் ஆண்டுக்கு 200 மில்லியன் நிதி ஒதுக்க வேண்டும். சீனம் போதிக்கும் மற்ற பள்ளிகளுக்கு 20 மில்லியன் நிதி ஒதுக்க வேண்டும்.”

அதே போல்,”தொழில் செய்யும் இளைஞர்களுக்கு முதலீடு செய்ய அரசாங்கம் கடனுடதவி வழங்க வேண்டும். அவர்களது பொருட்களை விளம்பரம் செய்ய தேசிய தொலைக்காட்சியில் இடமளிக்க வேண்டும்.” என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின்  விலை உயர்வு திட்டங்கள், சிலாங்கூர் அரசாங்க பணியாளர்களின் சம்பள உயர்வு ஆகியவற்றுக்கு எதிராகவும் இளைஞர் பிரிவு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.