Home நாடு மசீச தலைமைப் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் – லியாவ் அறிவிப்பு

மசீச தலைமைப் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் – லியாவ் அறிவிப்பு

989
0
SHARE
Ad

Liow-Tiong-Laiஉலு சிலாங்கூர், ஜூன் 29 – மசீசா கட்சியின் உயர்மட்டப் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடக்கும் வண்ணம் கட்சியில் சட்டதிருத்தம் செய்யப்படும் என மசீச தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் தெரிவித்துள்ளார்.

தற்போது நடைமுறையில், கட்சியின் தலைவர் மற்றும் துணைத்தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு 2,400 மத்தியப் பேராளர்களிடம் உள்ளது. இதை மாற்றி அப்பொறுப்பு 40,000 தொகுதிப் பேராளர்களிடம் வழங்கப்படவுள்ளது.

மத்தியப் பேராளர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு தொகுதி வாரியான பேராளர்களுக்கும் உள்ளது என லியாவ் நேற்று பாத்தாங் காளியில் நடைபெற்ற உலு சிலாங்கூர் மசீச பேராளர்கள் ஆண்டுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மத்தியப் பேராளர்களுக்கு உதவித் தலைவர்களையும், மத்தியச் செயலவை உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு வழங்கப்படும் என்றும் லியாவ் தெரிவித்துள்ளார்.

“கட்சித் தேர்தல் மறுசீரமைப்பில் இது முதல் நிலை தான். கட்சியின் அனைத்து உறுப்பினர்களின் வாக்குகளுக்கும் சக்தி ஏற்படும் வகையில் சிறிது சிறிதாக மாற்றங்கள் நிகழ்த்தப்படும்” என்றும் லியாவ் கூறியுள்ளார்.