Home அவசியம் படிக்க வேண்டியவை “உங்கள் மகளைக் காப்பாற்றுங்கள்” – தம்படம் மூலம் இந்தியர்களுக்கு உணர்த்திய மோடி!

“உங்கள் மகளைக் காப்பாற்றுங்கள்” – தம்படம் மூலம் இந்தியர்களுக்கு உணர்த்திய மோடி!

595
0
SHARE
Ad

350711-selfie-with-my-daughterபுது டெல்லி, ஜூன் 29 – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து நேற்று இந்திய அப்பாக்களுக்குக் குறிப்பாகப் பெண் குழந்தைகளைப் பெற்ற அப்பாக்களுக்கு டுவிட்டர் வாயிலாக முக்கியச் செய்தி பிரகடனப்படுத்தப்பட்டது. ‘உங்கள் மகளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள், அவளுக்குக் கற்றுக் கொடுங்கள்’ என்பதே நேற்று மோடியின் டுவிட்டர் முழக்கமாக இருந்தது. இதனை ஏற்ற இந்திய இணையவாசிகள் நேற்று டுவிட்டரில் தங்கள் மகள்களுடன் தம்படம் (செல்ஃபி) எடுத்து அதனை ஹாஷ்டேக் செய்தனர்.

இந்தியாவில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் அதிகரித்து வருகிறது. பாஜக ஆட்சியிலும் இது தொடர்வதால், எதிர்கட்சிகளும், பொது நோக்கர்களும் இது தொடர்பாகக் கடுமையான விமர்சனங்களை செய்து வந்தனர்.

இந்நிலையில், வானொலி ஒன்றில் பேசிய மோடி, பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற ரீதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். இணையவாசிகளும் இதில் பங்கு பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து தான் இணையவாசிகள் தங்கள் மகள்களுடன் தம்படம் எடுத்து வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.

#TamilSchoolmychoice

புகைப்படம் எடுப்பதிலும், பெண்களுக்கு ஆதரவாக இணையப் பிரச்சாரம் மேற்கொள்வதிலும் காட்டும் ஆர்வத்தை,  இந்திய ஆண்கள் நடைமுறையிலும் செயல்படுத்த வேண்டும் என்பதே பெண்ணியவாதிகளின் கோரிக்கையாக உள்ளது.