Home இந்தியா ஆர்.கே.நகரில் வாக்காளர்களை விட அதிக வாக்குகள் பதிவானது: இன்று மறுவாக்குப்பதிவு!

ஆர்.கே.நகரில் வாக்காளர்களை விட அதிக வாக்குகள் பதிவானது: இன்று மறுவாக்குப்பதிவு!

540
0
SHARE
Ad

29-1435536030-rknagarbypollசென்னை, ஜூன் 29 – ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களை விட அதிக வாக்குகள் பதிவான 181-ஆவது வாக்குச் சாவடியில் இன்று காலை 8 மணிக்கு மறுவாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதல்வர் ஜெயலலிதா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சி.மகேந்திரன் உட்பட 28 பேர் போட்டியிட்ட சென்னை ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது.

2 லட்சத்து 40 ஆயிரத்து 543 வாக்காளர்களை கொண்ட இத்தொகுதியில் 230 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

#TamilSchoolmychoice

இதில், மொத்தம் 74.4 சதவீதம் வாக்குகள் பதிவானது. ஆனால் பழைய வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, வடக்குப்பகுதி (கீழ் மேற்கு பகுதி) சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 181-வது வாக்குச்சாவடியில், வாக்காளர்கள் பட்டியலை விட கூடுதலான வாக்குகள் பதிவாகி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தக் குளறுபடி காரணமாக 181-வது வாக்குச்சாவடியில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அறிவித்திருந்தார். இதனையடுத்து இன்று காலை 8 மணிக்கு மறுவாக்குப் பதிவு தொடங்கியது.

இந்த வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதற்குப் புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாக்காளர்கள் வாக்களித்ததை உறுதிப்படுத்தும் விதமாக அவர்களது இடது கை நடுவிரலில் அடையாள மை வைக்கப்படுகிறது.