Home இந்தியா சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார் தினகரன்!

சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார் தினகரன்!

1153
0
SHARE
Ad

TTV Dhinakaranசென்னை – நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், 40,707 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்ற டிடிவி.தினகரன் இன்று வெள்ளிக்கிழமை சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார்.

அவருக்கு சபாநாயகர் தனபால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “சசிகலா தலைமையிலான அணி தான் உண்மையான அதிமுக என ஆர்.கே.நகர் மக்கள் நல்ல தீர்ப்பு வழங்கியுள்ளனர். விரைவில் கட்சிக்குக் களங்கம் ஏற்படுத்தியவர்களால் தற்போது நடத்தப்பட்டு வரும் இந்த ஆட்சிக்கு முடிவு கட்டவே மக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்” என்று தெரிவித்தார்.