Home நாடு மின்னல் வானொலியில் உலக நடப்புகளை விவரித்த செல்லியல் ஆசிரியர்

மின்னல் வானொலியில் உலக நடப்புகளை விவரித்த செல்லியல் ஆசிரியர்

1154
0
SHARE
Ad
mutharasan-radio-interview-world events-feature-28122017
28 டிசம்பர் 2017-இல் மின்னல் பண்பலையில் ஒலியேறிய ‘காலைக் கதிர்’ நிகழ்ச்சியில், 2017-ஆம் ஆண்டின் முக்கிய உலக நடப்புகளை விவரிக்கும் அங்கத்தை அறிவிப்பாளர்களாக இருந்து வழிநடத்திய தெய்வீகன் (இடது), ஹரி (வலது) ஆகியோருடன் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்…

கோலாலம்பூர் – 2017-ஆம் ஆண்டு நம்மைக் கடந்து போகும் ஆண்டின் இறுதிக் கட்டத்தில் மின்னல் பண்பலை (எப்.எம்) வானொலியில் காலையில் ஒலியேறும் ‘காலைக் கதிர்’ நிகழ்ச்சியில் தொடர்ந்து இந்த ஆண்டின் மிக முக்கிய நிகழ்ச்சிகளை துறை வாரியாக அதன் அறிவிப்பாளர்கள் ஒலியேற்றி வருகின்றனர்.

அந்த வரிசையில் நேற்று வியாழக்கிழமை (28 டிசம்பர் 2017) காலை 8.00 மணி முதல் 9.30 மணிவரை மின்னல் வானொலியில் ஒலியேறிய காலைக் கதிர் நிகழ்ச்சியில் அறிவிப்பாளர்கள் தெய்வீகன் மற்றும் ஹரி இருவரும் இணைந்து 2017-ஆம் ஆண்டின் முக்கிய உலக சம்பவங்கள் குறித்து விவரித்தனர்.

mutharasan-radio-interview-world events-1-28122017
இரா.முத்தரசனுடன் தெய்வீகன், ஹரி

இந்த நிகழ்ச்சியில் அவர்களுடன் சிறப்பு விருந்தினராக இணைந்த செல்லியல் இணைய ஊடகத்தின் நிருவாக ஆசிரியரான இரா.முத்தரசன், கடந்து போகும் 2017-ஆம் ஆண்டின் முக்கிய உலக நடப்புகள் குறித்துத் தனது பார்வையையும், கண்ணோட்டத்தையும் வழங்கினார்.

#TamilSchoolmychoice

பிறக்கப் போகும் 2018-ஆம் ஆண்டில் உலக அரங்கில் மிகவும் எதிர்பார்க்கப்படும் சம்பவங்கள், அரசியல் மாற்றங்கள் குறித்தும் இந்த நிகழ்ச்சியில் கருத்துப் பரிமாற்றங்கள் செய்து கொள்ளப்பட்டன.