Home கலை உலகம் பிலிம்பேர் விருதுகள்: சிறந்த படமாகக் கத்தி, சிறந்த நடிகராகத் தனுஷ் தேர்வு!

பிலிம்பேர் விருதுகள்: சிறந்த படமாகக் கத்தி, சிறந்த நடிகராகத் தனுஷ் தேர்வு!

505
0
SHARE
Ad

filmfareசென்னை, ஜூன் 29 – 62-வது பிட்டானியா தென்னிந்தியப் பிலிம்பேர் விருதுகள் விழா சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது.

இதில் சிறந்த படமாகத் தமிழில் கத்திக்கும், சிறந்த தமிழ் நடிகராக ‘வேலையில்லாப் பட்டதாரி’ படத்தில் நடித்த தனுஷுக்கும், அதே படத்திற்குச் சிறந்த இசையமைப்பாளராக அனிருத்திற்கும் கிடைத்துள்ளது.

பிலிம்பேர் விருதுகள் முழு விபரம்:

#TamilSchoolmychoice

சிறந்த படம் – கத்தி

சிறந்த இயக்குநர் – ஏ.ஆர்.முருகதாஸ்

சிறந்த நடிகர் – தனுஷ்

சிறந்த நடிகை – மாளவிகா நாயர் (குக்கூ)

சிறந்த துணை நடிகர் – பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா)

சிறந்த துணை நடிகை – ரித்விகா (மெட்ராஸ்)

சிறந்த இசையமைப்பாளர் – அனிருத் (வேலையில்லாப் பட்டதாரி)

சிறந்த பாடல் வரிகள் – நா முத்துக்குமார் (சைவம்- அழகே)

சிறந்த பாடகர் – பிரதீப் குமார் (ஆகாயம் தீப்பிடிச்சா- மெட்ராஸ்)

சிறந்த பாடகி – உத்தரா உன்னிக்கிருஷ்ணன் (சைவம் – அழகே)