சென்னை, ஜூலை 17 – 61-வது பிலிம்பேர் விருது வழங்கும் விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது.
இதில் நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. ‘ராஜாராணி’ படத்தில் நடித்ததற்காக இவ்விருதை பெற்றார்.
சிறந்த நடிகருக்கான விருதை ‘மரியான்’ படத்தில் நடித்த தனுஷ் பெற்றார்.
#TamilSchoolmychoice
இதுபோல் ‘பரதேசி’ படத்தில் நடித்த அதர்வாவும் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார்.
‘கடல்’ படத்தில் நடித்த கவுதம் கார்த்திக்கும், ‘நேரம்’ படத்தில் நடித்த நவீன் பாலியும் சிறந்த அறிமுக நாயகனுக்கான விருதுகளை பெற்றனர்.
சிறந்த புதுமுக நடிகைக்கான விருதை நஸ்ரியா பெற்றார். ‘நேரம்’ படத்தில் நடித்ததற்காக இவ்விருது கிடைத்தது.
சிறந்த துணை நடிகருக்கான விருது ‘ராஜாராணி’யில் நடித்த சத்யராஜ், மற்றும் ‘பரதேசி’யில் நடித்த தன்ஷிகாவுக்கும் கிடைத்தது.
சிறந்த இயக்குனருக்கான விருதை பாலா பெற்றார். ‘பரதேசி’ படத்துக்காக இவ்விருது கிடைத்தது.
சிறந்த படத்துக்கான விருது ‘தங்கமீன்கள்’ படத்துக்கு கிடைத்தது. ‘கடல்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ராஜீவ்மேனன் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை பெற்றார்.
ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கிடைத்தது. ‘மரியான்’ படத்தில் இசையமைத்ததற்காக இவ்விருதை பெற்றார்.
சின்ன குயில் சித்ராவிற்கு சிறந்த பின்னணி பாடகிக்கான விருது கிடைத்தது.
‘தங்க மீன்கள்’ படத்தில் ஆனந்தயாழை மீட்டுகிறாய் பாடலை எழுதிய நா.முத்துக்குமார் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை பெற்றார். இந்த பாடலை பாடிய ஸ்ரீராம் பார்த்தசாரதிக்கு சிறந்த பாடகருக்கான விருது கிடைத்தது.
விழாவில் நடிகர் கமலஹாசன், நடிகர் ஸ்ரீகாந்த், இந்தி நடிகை ரேகா, தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு, குஷ்பு, சமந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் நடிகை சுருதிஹாசன், டாப்ஸி, தமன்னா, வேதிகா ஆகியோர் நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.