Home இந்தியா “20 ரூபாய் டோக்கனுக்கு விலை போய்விட்டீர்களே?” – ஆர்.கே.நகர் மக்களைச் சாடிய கமல்!

“20 ரூபாய் டோக்கனுக்கு விலை போய்விட்டீர்களே?” – ஆர்.கே.நகர் மக்களைச் சாடிய கமல்!

1220
0
SHARE
Ad

Kamal-Hasanசென்னை -அண்மையில் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சி, தலைக்கு 6,000 ரூபாய் கொடுத்ததாகவும், சுயேட்சை வேட்பாளர் தலைக்கு 20,000 கொடுத்ததால், அதிக காசு கொடுத்த சுயேட்சையின் பொத்தானை வாக்காளர்கள் அழுத்திவிட்டார்கள் என்றும் நடிகர் கமல்ஹாசன் விகடனில் எழுதி வரும் ‘என்னுள் மையம் கொண்ட புயல்’ என்ற தொடரில் குறிப்பிட்டிருக்கிறார்.

“நான் பார்க்காத சிறைக்கூடங்களா? ரெய்டுகளா?” என்ற சுயேட்சையின் பதிலில் மயங்கிய என் ஊடக நண்பர்கள் கூட, ‘என்ன ஒரு நெஞ்சுரம்’, ‘என்ன ஒரு ஆளுமை’, ‘இன்னொரு தலைவர் கிடைத்துவிட்டார்’ என்றும் போட்டிப் போட்டுக் கொண்டு பாராட்டுகின்றனர்.”

“சில அரசியல் அறிஞர்களும், ‘ஆஹா இவை தான் வெற்றிக்கார வியூகங்கள், ‘இருபதாயிரம் ரூபாய் அமவுண்டுக்கான டோக்கனா இருபது ரூபாய் கொடுத்தே ஜெயிச்சார் பார்யா’ என்று பார்புகழ் பாராட்டும் குறிப்பிடத்தக்கது. இப்படி ஆகப் பெரிய அவமானம் எந்தப் புள்ளியில் கொண்டாட்டமாக மாறுகிறது என்பது தான் எனக்குப் பிடிபடாத கேள்வி.” என்று கமல் இவ்வாரக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

மேலும் ஆர்.கே.நகர் மக்கள் குறித்துப் பேசியிருக்கும் கமல், “உங்கள் உள்ளம் எவ்வளவு அழகான உலகம். உங்களின் அன்பும் அதன் வெளிப்பான நெகிழ்வும் என்ன செய்யும் என்பதை சென்னை வெள்ளத்தில் உங்களின் உதவிகள் மூலம் இந்த உலகிற்குக் காட்டினீர்களே. அப்படிப்பட்ட நீங்கள் 20 ரூபாய் டோக்கன்களுக்கு விலை போயிருக்கிறீர்களே? இது பிச்சை எடுப்பதை விடக் கேவலம். அதுவும் திருடனிடம் பிச்சை எடுப்பதை விடக் கேவலம் உண்டா?” என்று கமல் கடுமையாகச் சாடியிருக்கிறார்.