Home நாடு தென்கொரிய சுற்றுலா மோசடி: பெண்ணைக் கைது செய்ய காவல்துறை தீவிரம்!

தென்கொரிய சுற்றுலா மோசடி: பெண்ணைக் கைது செய்ய காவல்துறை தீவிரம்!

798
0
SHARE
Ad

Bukchon-seoul-towerகோலாலம்பூர் – தென்கொரியாவிற்கு சுற்றுலா ஏற்பாடு செய்வதாகக் கூறி 23 பேரிடம் 150,000 ரிங்கிட் வரையில் ஏமாற்றியதாக நம்பப்படும் பெண்ணை காவல்துறை தீவிரமாகத் தேடி வருகின்றது.

அப்பெண்ணிடம் ஏமாந்தவர்களில் பெரும்பாலானவர்கள் முக்கியப் பிரமுகர்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் என்றும் பெட்டாலிங் ஜெயா காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமது ஜானி சே தெரிவித்திருக்கிறார்.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அப்பெண்ணின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியிருக்கின்றனர். ஆனால் சியோலில் குழுவாக இறங்கிய பின்னர் தான் அப்பெண் சொன்னது போல் தங்கும்விடுதிக்கான முன்பதிவு எதுவும் செய்யவில்லை என்பது தெரியவந்திருக்கிறது என்றும் முகமது ஜானி சே செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

தற்போது இந்த விவகாரம் குற்றவியல் சட்டம் பிரிவு 420-ன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.