Home தேர்தல்-14 14-வது பொதுத்தேர்தல்: ஷா ஆலமில் போட்டியிடுகிறாரா அஸ்மின்?

14-வது பொதுத்தேர்தல்: ஷா ஆலமில் போட்டியிடுகிறாரா அஸ்மின்?

816
0
SHARE
Ad

azmin ali-feature-1கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி, ஷா ஆலம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக சினார் செய்தி இணையதளம் கூறுகின்றது.

இதனை சிலாங்கூர் பிகேஆர் துணைத் தலைவர் ஜுரைதா கமாருடினும் ‘தி மலாய் மெயில்’ இணையதளத்திடம் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

“கடவுள் விருப்பம். காரணம் சிலாங்கூர் நிர்வாகத்தின் கீழ் அதன் தலைநகரமான ஷா ஆலம் வருகின்றது. அஸ்மின் அங்கு போட்டியிட்டு தேசிய முன்னணி – அம்னோவிற்கு, பக்காத்தான் ஹராப்பானுக்கு அரசு ஊழியர்களின் ஆதரவு இருப்பதைக் காட்டலாம்” என்று ஜுரைதா தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, ஜுரைதா உலு லங்காட் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இது குறித்துப் பதிலளித்திருக்கும் ஜுரைதா, கட்சி எங்கு போட்டியிட முடிவெடுக்கிறதோ அங்கு போட்டியிடுவேன் என்று தெரிவித்திருக்கிறார்.

இவ்விரு தொகுதிகளும் கடந்த 13-வது பொதுத்தேர்தலில் பாஸ் கட்சி போட்டியிட்டு 17,267 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.