Home இந்தியா ஸ்டாலின் இருக்கும் வரை திமுக வெற்றியடையாது – அழகிரி கருத்து!

ஸ்டாலின் இருக்கும் வரை திமுக வெற்றியடையாது – அழகிரி கருத்து!

1309
0
SHARE
Ad

azhagiriசென்னை –  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக டிபாசிட் (கட்டுத்தொகை) இழந்து தோற்றதற்கு ஸ்டாலின் செயல் தலைவராக இருப்பது தான் காரணம் என மு.க.அழகிரி கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டியளித்திருக்கும் மு.க.அழகிரி அதில் கூறியிருப்பதாவது:-

“கருணாநிதி தலைமைத்துவம் இருந்த போது எதிர்கொண்ட தேர்தல்கள் அனைத்திலும் வெற்றி கிடைத்தது. ஆனால் ஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை திமுக வெற்றி பெறப்போவதில்லை. காரணம், ஸ்டாலின் களப்பணி செய்யாமல் வெறும் வேனில் சென்று ஓட்டு கேட்கிறார். அதனால் எந்த மாறுதலும் நடக்கப் போவது இல்லை”

#TamilSchoolmychoice

“அதேபோல், கட்சியில் புதிதாக வருபவர்களுக்குப் பதவி கொடுப்பதை நிறுத்திவிட்டு, உண்மையாக கட்சிக்காக உழைக்கும் தொண்டர்களுக்குப் பதவி வழங்கி உயர்த்த வேண்டும். அப்போது தான் கட்சி சரியான பாதையில் செல்லும்”

“திமுக மீண்டும் வெற்றிப் பாதையில் செல்ல மீண்டும் நல்ல தலைமைத்துவம் தேவை. அதைவிடுத்து பண நாயகம் வென்றதாக குற்றம் சாட்டினால் மட்டும் போதாது” என்று மு.க.அழகிரி தெரிவித்திருக்கிறார்.

கடந்த டிசம்பர் 24-ம் தேதி நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கிய டிடிவி.தினகரன் 40,707 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

இத்தேர்தலில் திமுக சார்பில் களமிறங்கிய வேட்பாளர் மருது கணேஷ் 24,651 வாக்குகள் மட்டுமே பெற்று டிபாசிட் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.