Home தொழில் நுட்பம் ‘இன்ஸ்டாகிராம்’ செயலிக்கு அமெரிக்கர்களிடையே அமோக ஆதரவு!

‘இன்ஸ்டாகிராம்’ செயலிக்கு அமெரிக்கர்களிடையே அமோக ஆதரவு!

565
0
SHARE
Ad

Instagran-featureடிசம்பர் 19 – புகைப்படங்களை இணையத் தொடர்பு செல்பேசிகளின் வழி பகிர்ந்து கொள்ளும் சமூகத்தள செயலியான இன்ஸ்டாகிராம் அமெரிக்கர்களிடையே பிரபலமாகி வருகின்றது.

#TamilSchoolmychoice

குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்டிருந்தாலும் அதன் பயன்பாடு மற்றொரு சமூக வலைத் தளமான ட்விட்டரை விட அதிக அளவில் இருப்பதாக நெல்சன் நிறுவன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2013ஆம் ஆண்டில் மாதம் ஒன்றுக்கு 31,992,000 எண்ணிக்கையிலான வருகையாளர்கள் ஐஓஎஸ் மற்றும் அண்ட்ரோய்ட் செயலிகளில் வழி இன்ஸ்டாகிராம் தளத்தைப் பயன்படுத்தியிருக்கின்றார்கள். இதன்மூலம் அமெரிக்காவின் 7வது பிரபலமான செல்பேசி செயலியாக இன்ஸ்டாகிராம் திகழ்கின்றது.

ட்விட்டர் ஒரு முதிர்ந்த, பிரபலமான சமூக வலைத் தளமாக இருந்தாலும், 30,760,000 எண்ணிக்கை கொண்ட தனி வருகையாளர்களைக் கொண்டு 10வது இடத்தையே அமெரிக்காவில் பிடித்திருக்கின்றது. ட்விட்டரை விட சுமார் பத்து இலட்சத்திற்கும் அதிகமான வருகையாளர்களை இன்ஸ்டாகிராம் பதிவு செய்திருக்கின்றது.

6வது இடத்தைப் பிடித்திருக்கும் ஜிமெயில் எனப்படும் இணைய முகவரி சேவை ஒரு மாதத்திற்கு 64,408,000 தனி வருகையாளர்களைப் பதிவு செய்திருக்கின்றது.

தற்போது இன்ஸ்டாகிராம் உலகம் முழுவதும் 150 மில்லியன் தீவிர பயனீட்டாளர்களைக் கொண்டுள்ளது. இதில் ஏறத்தாழ 60 சதவீதத்தினர் அமெரிக்காவிற்கு வெளியே வாழ்கின்றார்கள். இருப்பினும் மற்ற செயலிகளுடன் ஒப்பிடும்போது இன்ஸ்டாகிராமின் பிரபல்யம் 66 சதவீதமாக அதிகரித்திருக்கின்றது. அதிக பிரபலமான முதல் 10 செயலிகளில் இதுதான அதிகமான வளர்ச்சியாகும்.

அண்ட்ரோய்ட் தளங்களில் ஜூன் 2012 முதல்தான் இன்ஸ்டாகிராம் செயல்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் திறன் பேசிகள் மூலம் இயங்கும் சமூக வலைத் தளங்களில் இன்னும் ஃபேஸ்புக் என்ற முகநூல்தான் அதிக பிரபலமானதாக திகழ்கின்றது. இரண்டாவது நிலையில் கூகுள் செர்ச் என்ற கூகுளின் தேடல் செயலியும், மூன்றாவது நிலையில் கூகுள் பிளே என்ற செயலிகளின் பதிவிறக்க தளமும் திகழ்கின்றது.