இங்கிலாந்து: இங்கிலாந்தில் உள்ள காற்பந்து வீரர்கள், இனவெறி இடுகைகளை நிரந்தரமாக நீக்கவும், துஷ்பிரயோகத்தை அடையாளம் காண அதிக ஆதாரங்களை கண்டறியவும் சமூக ஊடகங்களைக் கேட்டுக்கொண்டனர்.
“இனாப் (Enough)” என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கடந்த ஏப்ரல் மாதத்தில் 24 மணிநேர சமூக ஊடக புறக்கணிப்பை ப்ரோபெஷனல் புட்பொல் அச்சோசியேஷன் (பிஎப்ஏ) (Professional Football Association- PFA) உறுப்பினர்கள் நடத்தியதை அடுத்து, அவர்கள் டுவிட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவன அதிகாரிகளை சந்தித்தனர்.
பிரீமியர் லீக் சீசனின் தொடக்க மாதத்தில், மான்செஸ்டர் யுனைடெட்டுக்கு பெனால்டி பந்தை மார்கஸ் ராஷ்போர்ட் தவறவிட்டதைத் தொடர்ந்து, கறுப்பின வீரர்கள் இனரீதியான துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் பிஎப்ஏ சமூக வலைப்பின்னல்களில் இருந்து கடுமையான நடவடிக்கையை விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.
தாமதமின்றி புண்படுத்தும் இடுகைகளை அடையாளம் காணவும் அகற்றவும் போதுமான ஆதாரங்கள் உள்ளதாக பிஎப்ஏ அசோசியேட்டட் பிரஸ்சிடம் தெரிவித்தது.
கடந்த இரண்டு வாரங்களில் இங்கிலாந்து கால்பந்து தொடர்பான துஷ்பிரயோகம் மற்றும் வெறுக்கத்தக்க நடத்தைக்கான 700-க்கும் மேற்பட்ட எடுத்துக்காட்டுகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக டுவிட்டர் நேற்று புதன்கிழமை கூறியது.
அந்த நடவடிக்கை எம்மாதிரியானது என்று குறிப்பிடப்படவில்லை, மேலும், இது குறித்து வீரர்கள் அதிக வெளிப்படைத் தன்மையை விரும்புவதாகக் கூறினர்.