Home நாடு ‘த ஹீட்’ வார இதழ் காலவரையின்றி முடக்கம்!

‘த ஹீட்’ வார இதழ் காலவரையின்றி முடக்கம்!

948
0
SHARE
Ad

heat13_540_405_101கோலாலம்பூர், டிச 20 – கடந்த  மாதம்  பிரதமர் நஜிப் மற்றும் அவரது மனைவி ரோஸ்மா குறித்து சர்ச்சைக்குரிய செய்தியை  வெளியிட்டதற்காக  ‘த ஹீட்’ வார இதழ் உள்துறை அமைச்சால் நேற்று காலவரையின்றி முடக்கம் செய்யப்பட்டது என்று பரவலாக தகவல்கள் வருகின்றன.

எனினும், அப்பத்திரிக்கை நிறுத்தப்பட்டதற்கான உண்மையான காரணம் தெரியவில்லை.

உள்துறை அமைச்சு அப்பத்திரிக்கைக்கு அனுப்பிய கடிதத்தில், சர்ச்சைக்குரிய கட்டுரை எது என குறிப்பிட்டுள்ளது என்று இன்னும் உறுதியாகவில்லை.

#TamilSchoolmychoice

கடந்த மாதம், நஜிப் மற்றும் அவரது மனைவி ரோஸ்மா இருவரும் எல்லை மீறி அரசாங்க பணத்தை செலவு செய்வதாகக் கூறும் “All eyes on big spending PM Najib” என்ற அப்பத்திரிக்கையின் தலைப்பு செய்தி காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.