Home நாடு பத்திரிக்கை சுதந்திரத்தில் மலேசியா பின்னடைவை சந்திக்கும் – லிம் கிட் சியாங்

பத்திரிக்கை சுதந்திரத்தில் மலேசியா பின்னடைவை சந்திக்கும் – லிம் கிட் சியாங்

710
0
SHARE
Ad

heat13_540_405_101கோலாலம்பூர், டிச 27 – ‘த ஹீட்’ வார இதழ் தடை செய்யப்பட்ட விவகாரத்தில் பிரதமர் நஜிப் துன் ரசாக் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும். அப்படி இல்லையென்றால் பத்திரிக்கை சுதந்திரத்திற்கான தரவரிசைப் பட்டியலில் (Press Freedom Index) மலேசியா, மியான்மர் நாட்டை விட தாழ்ந்துவிடும் என்று ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் கூறியுள்ளார்.

இது குறித்து லிம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பத்திரிக்கை சுதந்திரத்திற்கான தரவரிசைப் பட்டியலில் சமீபத்திய ஆண்டுகளில் மலேசியா 23 இடங்களில் பின் தங்கி தரவரிசைப் பட்டியலில் 122 வது இடத்தை அடைந்துள்ளது. அதே நேரத்தில் மியான்மர் 18 இடங்கள் உயர்ந்து 15 ஆவது இடத்தை கடந்த   2011/2012 ஆம் ஆண்டிலேயே அடைந்து விட்டது.”

“எனவே இந்நிலை வரும் 2014 ஆம் ஆண்டில் மேலும் மோசமடையாமல் தடுக்க நஜிப் இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு த ஹீட் வார இதழின் உரிமத்தை திரும்பத் தர உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இதற்கு முன்னர், மலேசியா தரவரிசைப் பட்டியலில் பின்னடைய பெர்சே 3.0 அமைப்பின் பேரணியில் ஏற்பட்ட மோதல் காரணமாக அமைந்தது. இதில் நிறைய பத்திரிக்கையாளர்களும், புகைப்படக்காரர்களும் தாக்கப்பட்டனர்.

“இது ஒரு ஜனநாயக நாடு என்று கூறிக்கொள்ளும் நஜிப், ‘த ஹீட்’ வார இதழ் முடக்கப்பட்டதன் மூலம், தனது வாக்குறுதிகளை மீறியிருப்பதோடு, மகாதீரின் சர்வாதிகார முறையைப் பயன்படுத்தி பத்திரிக்கை சுதந்திரத்தை பறித்துள்ளார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் லிம் குறிப்பிட்டார்.

கடந்த  மாதம்  பிரதமர் நஜிப் மற்றும் அவரது மனைவி ரோஸ்மா குறித்து சர்ச்சைக்குரிய செய்தியை  வெளியிட்டதற்காக  ’த ஹீட்’ வார இதழ் உள்துறை அமைச்சால் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி காலவரையின்றி முடக்கம் செய்யப்பட்டது.

எனினும், உள்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர், பத்திரிக்கை விதிகளை மீறியதால் தான் அவ்வார இதழ் முடக்கப்பட்டதாக ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’ வெளியிட்டிருந்த செய்தியை மேற்கோள் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.