Home நாடு ‘த ஹீட்’ விவகாரம்: நியாயமாக நடப்பதாக உள்துறை அமைச்சு உறுதி!

‘த ஹீட்’ விவகாரம்: நியாயமாக நடப்பதாக உள்துறை அமைச்சு உறுதி!

627
0
SHARE
Ad

heat13_540_405_101கோலாலம்பூர், டிச 24 – ‘த ஹீட்’ இதழின் ஆசிரியர் குழுவும், உள்துறை அமைச்சும் நேற்று சந்தித்து, வார இதழ் முடக்கம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன் பின்னர் ‘த ஹீட்’ வெளியிட்ட அறிக்கையின் படி, “ஹீட் இதழ் முடக்கத்தை நியாயமான முறையில் திரும்பப் பெறுவதாக அமைச்சரவை உறுதியளித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாண்டு ஜூலை மாதம் 8 ஆம் தேதி, உள்துறை அமைச்சகம் ஹீட் இதழுக்கு ‘பொருளாதாரம்/ சமூகம்’ என்ற பிரிவின் அடிப்படையில் அனுமதி அளித்ததாகவும், அதன் பின்னர் செப்டம்பர் 18 ஆம் தேதி ‘நடப்பு விவகாரங்கள்’ என்ற பிரிவில் அனுமதி வழங்கியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த  மாதம்  பிரதமர் நஜிப் மற்றும் அவரது மனைவி ரோஸ்மா குறித்து சர்ச்சைக்குரிய செய்தியை  வெளியிட்டதற்காக  ’த ஹீட்’ வார இதழ் உள்துறை அமைச்சால் காலவரையின்றி முடக்கம் செய்யப்பட்டது என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.