Home இந்தியா தேவயானி கைது: சிறிய தவறால் நடந்த விபரீதம்

தேவயானி கைது: சிறிய தவறால் நடந்த விபரீதம்

507
0
SHARE
Ad

devani

புது டெல்லி, டிசம்பர் 26- விசா விண்ணப்பத்தில் பணிப்பெண் குறிப்பிடப்பட்ட விவரங்களை, அமெரிக்க அதிகாரி மார்க் ஸ்மித் தவறாக புரிந்துகொண்டதே தேவயானி கோப்ரகடே கைதுக்கு காரணம் என அவரது வழக்கறிஞர் டேனியல் அர்ஷாக் தெரிவித்துள்ளார்.

விசா விண்ணப்பத்தில் படிவம் டி.எஸ்.160 ல் தனது சம்பளம் 4500 டொலர் என்று தேவ்யானி குறிப்பிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

இதனை சங்கீதா ரிச்சர்டு எதிர்பார்த்த சம்பளமாகவும், ஆனால் தேவ்யானி, சங்கீதாவுக்கு 1560 டொலர் தர சம்மதித்தாகவும் தவறாக புரிந்து கொண்ட மார்க் ஸ்மித், தனது விசாரணையில் தேவ்யானி குற்றவாளி என துல்லிமாக அறிந்துள்ளதாக கூறி கைது செய்துள்ளார்.

இதுகுறித்து டேனியல் கூறுகையில், இவ்விவரங்களை இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் பரிசீலிக்கும்போது, தேவ்யானி போதுமான சம்பளம் பெறுவதால் சங்கீதாவுக்கு அவர் சம்பளம் தரமுடியும் என்றும் அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் சரியானது என முடிவுக்கு வரமுடியும் எனவும் டேனியல் தெரிவித்துள்ளார்.

மேலும் ஸ்மித் செய்த சிறிய தவறால் எவ்வளவு பெரிய கொடூரமான விஷயம் நடந்துவிட்டது என்று கூறியுள்ளார்.