Home வாழ் நலம் நடைப்பயிற்சியின் நன்மைகள்!

நடைப்பயிற்சியின் நன்மைகள்!

596
0
SHARE
Ad

walking

கோலாலம்பூர், பிப் 4- உடல் ஆரோக்கியத்தைக் காக்க எளிமையான நடைப்பயிற்சியே போதுமானது.  நடைப்பயிற்சி செய்வதனால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. அவை பின்வருமாறு :

*  நடைப்பயிற்சி, நல்ல தூக்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பகல் பொழுதில் உடல் சக்தியை ஊக்கப்படுத்துதால், இரவில் நீண்ட நேரம் ஆழ்ந்த நிம்மதியான தூக்கத்தைக் கொடுக்கும். குறிப்பாக, மாலை வேளை நடைப்பயிற்சி இரவில் ஆழ்ந்து நிம்மதியாக உறங்க வைக்கும்.

#TamilSchoolmychoice

* நடைப்பயிற்சி மனஅழுத்தத்தைக் குறைக்கிறது. கோபதாபங்கள், மனஅழுத்தத்தைக் குறைத்து, மனநலத்தைப் பேணுகிறது. எனவே மன அழுத்தத்தில் தத்தளிப்பது போல் உணர்ந்தால் உடனே வெளியே வந்து சற்றுநேரம் நடந்தால் அந்த உடல் இயக்கம் மற்றும் சுத்தமான காற்றின் கூட்டு உடனடியாக மனதை லேசாக்கி மனநிலையைச் சீராக்கும்.

* நடைப்பயிற்சி, உடல் எடையைக் குறைக்கிறது. மேலும், ஆரோக்கியமான உடல் எடையைத் தக்கவைத்துக் கொள்ள உதவுகிறது. ஒரு நாளில் தோராயமாக 5 ஆயிரம் அடிகள் நடந்தால், அது உடலில் உள்ள கூடுதல் கொழுப்பையும், ஒட்டுமொத்த உடல் எடையையும் குறைக்கும்.

* ஒரே சீரான வேகத்தில் நடைப்பயற்சி மேற்கொள்வது, தசைகளை வலுவாக்கி, அவற்றின் தாங்கிக் கொள்ளும் சக்தியை மேம்படுத்துகிறது.

* வாழ்நாளை நீட்டிக்கிறது. தொடர்ந்து நடைப்பயிற்சி மேற்கொள்வது வாழ்நாளில் மேலும் சில வருடங்களை நீட்டிக்க உதவும். அதிமுக்கியமாக, இது மூட்டு அழற்சி போன்ற முதுமை தொடர்பான நோய்கள் வராமல் தடுத்து, உளைச்சல் மற்றும் பதற்றம் ஆகியவற்றைக் குறைத்து மீண்டும் இளமையாக்கி, நம்பிக்கையோடு வாழ்வை எதிர் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

* உடலை வலுவாக்குகிறது. நல்ல நடைப்பயிற்சி, கால்களை வலுவாக்கி, அவற்றிற்கு அழகிய வடிவத்தை கொடுக்கும்.

* நடைப்பயிற்சி கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது

எனவே, பல நன்மைகளை கொண்டுள்ள இந்த நடைப்பயிற்சியை நாளை நாளை என்று தள்ளிப்போடாமல், இன்றே நடக்கத் தொடங்குங்கள், நலம் பெறுவோம்!