Home இந்தியா ஸ்டாலினுக்கு அழகிரியால் ஆபத்து இருக்கலாம் – ஜெயலலிதா சந்தேகம்

ஸ்டாலினுக்கு அழகிரியால் ஆபத்து இருக்கலாம் – ஜெயலலிதா சந்தேகம்

530
0
SHARE
Ad

jeyalalitha1சென்னை, பிப் 4 – “ஸ்டாலினுக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு கேட்டு திமுக தலைவர் கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதன் மூலம், மு.க அழகிரியால், ஸ்டாலின் உயிருக்கு ஆபத்து இருப்பதை மறைமுகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்து ஜெயலலிதா சட்டசபையில் கூறியிருப்பதாவது:-

“ இன்னும் 3 மாதங்களில் இறக்கப் போகிறவருக்கு எதற்கு பதவி என்று ஸ்டாலின் பற்றி அழகிரி கூறியதாக கருணாநிதி பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார். அதோடு இஸட் பிளஸ் பாதுகாப்பு கேட்டு பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில் ‘விடுதலை புலிகள், மத அடிப்படைவாதிகள் மற்றும் அரசியல் விரோதிகளால், ஸ்டாலின் உயிருக்கு ஆபத்து’ என்று குறிப்பிட்டுள்ளார்.”

#TamilSchoolmychoice

“விடுதலைப் புலிகளிடமிருந்து ஆபத்து என்பது இல்லாத ஒன்று. அதே போல் மத அடிப்படைவாதிகளிடமிருந்து ஆபத்து என்பது கற்பனை. இறுதியாக பல தரப்பட்ட, அரசியல் விரோதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. அரசியல் விரோதிகள் யார் என்பது குறிப்பிடவில்லை.கடிதம் எழுதியுள்ள தருணத்தையும், கருணாநிதி குடும்பத்தில் நடக்கும் குழப்பத்தையும் ஒப்பிடுகையில், ‘மு.க.அழகிரி மூலம் ஸ்டாலினுக்கு ஆபத்து’ என்பது மறைமுகமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.” இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்

மேலும் “இளைய மகனுக்கு, மூத்த மகனால் ஆபத்து என்றதும் அவசர அவசரமாக பிரதமருக்கு கடிதம் எழுதும் கருணாநிதி, பத்திரிகை எரிப்பு சம்பவம், தா.கிருட்டிணன் கொலை வழக்கில் என்ன நடவடிக்கை எடுத்தார்?” என்றும் ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.

“தனக்கு ஒரு நீதி.தன் குடும்பத்திற்கு ஒரு நீதி.மற்றவருக்கு ஒரு நீதி என செயல்படும், கருணாநிதியை தலைவராகக் கொண்டு செயல்படும் தி.மு.கவினர், சட்டம் – ஒழுங்கு குறித்து பேசுவது நகைப்புக்குரியது.” என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.