கெஜ்ரிவால் தனது பேட்டியில் கூறியவது, நாங்கள் புதிய இந்தியாவிற்கு பாதை அமைக்க விரும்புகிறோம். ஊழலற்ற இந்தியாவையே நாங்கள் விரும்புகிறோம். அது தான் எங்களின் கனவு. அன்னா ஹசாரே, மம்தாவிற்கு ஆதரவு அளிப்பதாக கூறி இருப்பதை நான் துரோகமாக கருதவில்லை, எனது துரதிஷ்டம் என்றே நினைக்கிறேன்.
எங்களுக்கு பதிலாக மம்தாவின் அரசியலை அவர் விரும்புகிறார். எங்களை பொருத்த வரை ஹசாரே மிகவும் மதிப்பிற்குரிய மனிதர். இருப்பினும் எங்களுக்குள் பல வேறுபட்ட எண்ணங்கள் உள்ளன. எங்களிடம் ஹசாரே கூறியதை நாங்கள் தீவிரமாக எண்ணி செயல்படுகிறோம். 17 அம்சங்களை குறிப்பிட்டு ஹசாரே எனக்கு கடிதம் எழுதி இருந்தார்.
கடிதம் கிடைத்த அடுத்த நாள் மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங், அசுதோஷ் மற்றும் நான், ஹசாரேவை சந்தித்து அவர் கூறிய அனைத்து அம்சங்களையும் ஏற்றுக் கொள்வதாக ஒப்புதல் தெரிவித்தோம். இருந்தும் அவர் ஏன், நாங்கள் அவரின் கடிதத்திற்கு பதிலளிக்கவில்லை என கூறினார் என்று தெரியவில்லை. நான் பதவி வெறியுடன் இருப்பதாக ஹசாரே கூறியது என்னை மிகவும் வேதனையடைய வைத்து விட்டது என கெஜ்ரிவால் தனது பேட்டியில் கூறியுள்ளார்.