Home அரசியல் நாடற்ற இந்தியர்கள்; யார் சொல்வது உண்மை?

நாடற்ற இந்தியர்கள்; யார் சொல்வது உண்மை?

949
0
SHARE
Ad

கோலாலம்பூர் – டிசம்பர் 12 – 13வது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் நாளொரு செய்தியாக புதிய புதிய சவால்கள் நமது அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்களிடையே உருவாகிக் கொண்டிருக்கின்றன.

சுமார் 3 லட்சம் இந்தியர்கள் நாடற்ற பிரஜைகளாக நாட்டில் வாழ்கின்றார்கள் என எதிர்க்கட்சிகள் அதிரடியாக அறிக்கை விட்டுக் கொண்டிருக்க, பிரதமர் நஜிப் துன் ரசாக், அண்மையில் நடந்த ம.இ.கா மாநாட்டில் உரையாற்றும்போது வெறும் 9,000 இந்தியர்கள் மட்டுமே நாடற்ற பிரஜைகளாக இருந்து குடியுரிமை பெற மனு செய்திருக்கின்றார்கள் என்று கூறியிருக்கின்றார்.

அவர்களின் மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், அதில் அநேகம் பேருக்கு ஏற்கனவே குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் நாடற்ற அந்த 3 லட்சம் பேர் யார் என்பதை அடையாளம் காட்டும் படியும் முடிந்தால் பெயர் குறிப்பிடும்படியும் ம,இ,கா தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு சவால் விடுத்துள்ளனர்.

இதில் யார் சொல்வது உண்மை என்பதை ஆதாரபூர்வமாக தெரிந்து கொள்ள மலேசிய இந்தியர்களும் ஆர்வமாக உள்ளனர்.

இதற்கிடையே நாடற்ற இந்தியர்களின் பிரச்சனையை அரசாங்கத் தலைமைத்துவத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவும், பொதுமக்களின் பார்வைக்கும் முன்வைக்கும் நோக்கிலும் இன்று புத்ரா ஜெயாவில் எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டிலான ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.