Home இந்தியா பாகிஸ்தானிலிருந்து கடத்தப்பட்ட 10 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் பஞ்சாபில் மீட்பு

பாகிஸ்தானிலிருந்து கடத்தப்பட்ட 10 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் பஞ்சாபில் மீட்பு

518
0
SHARE
Ad

drugsஜலந்தர், பிப். 15- பஞ்சாப் மாநில பெரோஸ்பூர் பாகிஸ்தான் எல்லையில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் ரோந்து சென்றனர். அப்போது பாகிஸ்தான் எல்லைக்குள்ளிலிருந்து 2 கருப்பு பாக்கெட்டுகள் தூக்கி வீசப்பட்டதை அவர்கள் கண்டனர். உடனே அதைக் கைப்பற்றி அதிகாரிகள் சோதனையிட்டனர்.

இது 2 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப்பொருள் என்பது தெரியவந்தது. இந்த போதைப்பொருள் சர்வதேச மதிப்பில் 10 கோடி எனக் கூறப்படுகிறது.

இந்த வருடம் மட்டும் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் கடத்தப்பட்ட 37 கிலோ கிராம் ஹெராயின் போதைப்பொருளும், 35 லட்ச ரூபாய் மதிப்புடைய கள்ள நோட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.