Home உலகம் கஜகஸ்தான் பிரதமர் திடீர் ராஜினாமா!

கஜகஸ்தான் பிரதமர் திடீர் ராஜினாமா!

523
0
SHARE
Ad

1800093836kasமாஸ்கோ, ஏப்ரல் 4 – கஜகஸ்தான் நாட்டின் பிரதமர் ஷெரிக் அக்மெடோவ் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதனால் அந்நாட்டில் அரசு கவிழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில், 20 ஆண்டுகள் அதிபராக இருந்து வருபவர் நூர்சுல்தான் நஜர்பாயேப் (வயது 73). தற்போதைய பிரதமர் அக்மெடோவுக்கு முன்னால் இவர் தான் பிரதமர் பதவி வகித்தார்.

கடந்த 2012-ஆம் ஆண்டில், நூர்சுல்தானுக்கு உயர் பதவி வழங்கப்பட்டவுடன் பிரதமராக அக்மெடோ பதவி ஏற்றார். இந்நிலையில், அக்மெடோவ், திடீரென ராஜினாமா செய்ததற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை.

#TamilSchoolmychoice

தன்னுடைய ராஜினாமாவை, அதிபர் ஏற்றுக் கொண்டதாக மட்டும் தெரிவித்துள்ளார். புதிய பிரதமராக, பெரும்பான்மை ஆதரவுடன், கரீம் மசிமோவ் மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதனிடையே பிரதமர் பதவியை ராஜினாமா செய்த அக்மெடோவுக்கு தற்காப்புத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வந்திருக்கின்றன.