Home உலகம் ஜெர்மனி விமானிகள் போராட்டம் – 900 விமானங்கள் ரத்து!

ஜெர்மனி விமானிகள் போராட்டம் – 900 விமானங்கள் ரத்து!

574
0
SHARE
Ad

lufthasaபெர்லின், ஏப்ரல் 4 – ஜெர்மனி  நாட்டில் பிரதான விமான சேவை நிறுவனமான  லுப்தான்ஸாவின் விமானிகள் சங்கம்  அறிவித்துள்ள வேலைநிறுத்தம் காரணமாக 900 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

நீண்டகாலாக தொடர்ந்து வரும் சம்பளப் பிரச்சனைக்குத் தீர்வு காண லுப்தான்ஸா நிர்வாகத்தை வலியுறுத்தி விமானிகள் வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.

இதனால் 3800 விமான சேவைகள் ரத்து செய்யப்படும் நிலை உருவானது. இதன் மூலம் 4.25 லட்சம் பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice